Saturday, October 20, 2018

அப்பனே இயேசுவே! உன் செருப்பாகி என்றும் உன் காலடியில் வாழ்வேன்!

உதிரத்தை சிந்தி உயிர் கொடுத்ததும் நீயே!
இதயத்தில் நுழைந்து என் உயிர் மூச்சாய் வாழ்வதும் நீயே
அன்பு என்னும் சொல்லல் என் ஆணவத்தை அடக்கியதும் நீயே
கல்லான மனதை உன் மீது பித்தாகி வைத்ததும் நீயே
அலைபாய்ந்த மனதை உன் மீது நிலை குத்தி வைத்ததும் நீயே
குப்பையில் கிடந்த என்னை குனிந்து தூக்கி நிறுத்தியதும் நீயே 
ரத்தம் சிந்தி மீட்டதால் கண்மணி போல் காப்பதுவும்  நீயே
இன்று மட்டும் அல்ல என்றுயென்று  எல்லாம் நீயே
அப்பனே இயேசுவே! உன் செருப்பாகி என்றும் உன் காலடியில் வாழ்வேன்!
உன் பெயருக்கு களங்கம் ஒன்று என்றால், என் உயிர் துறந்து வீழ்வேன்!!

                              (c ) 2018 அருண் ஜெபராஜ்

Friday, October 19, 2018

உதிரத்தில் மறைந்து இருக்கும் உயிரைப் போல்!

மெளன இரவில் மெல்ல திறக்கும் மொட்டு போல்
மெல்ல வரும் நேசத்திற்கு நிகர் எதுவும் இல்லை!
கற்புள்ள பெண்ணின் நேசம் போல்
உலகில் ஒரு சுகம் எங்கும் இல்லை!
ஆண் என்றும், பெண் என்றும் படைத்ததில்
பாவம் என்றும் எப்போதும் இருந்தது இல்லை!
நாணம் கொண்டு மறைந்திருக்கும் பெண்ணின் குணம் போல்
உலகில் அழகு எதுவும் இல்லை!
தெய்வ சித்தப்படி அமையும் துணைப் போல்
சொர்க்கம் வேறு எங்கும் இல்லை!
உதிரத்தில் மறைந்து இருக்கும் உயிரைப் போல்
உள்ளூர மறைந்திருக்கும் நேசத்திற்கு நிகர் உலகில் எதுவும் இல்லை!
 
© 2015 Arun Jebaraj

உண்மை தெய்வம் அறியும்!

உயிரை உருவி செல்லும் வலியின் உணர்வை
இவ்வுலகில் யாருக்கு புரியும் ?
உடைந்த இதயம் அழும் ஊமை மொழியை
இவ்வுலகில் யாருக்கு கேட்கும்?
உயிரை உருவி செல்லும் வலியின் உணர்வை
உண்மை தெய்வம் மட்டுமே அறியும்!
உடைந்த இதயம் அழும் ஊமை மொழியை
உண்மை அன்புக்கு மட்டுமே கேட்கும்!
குருட்டு உலகுக்கு எப்படி புரியும்?
கண்ணீரின் இந்த பயணம்!
தொலை தூரம் தெரியும் நம் தேசம்
பாதையின் இரு புறமும் மாயை
எதுவும் இங்கு மாறி போகும்
எந்த உறவும் அழிந்து சாகும்
துன்பங்கள் பல தாண்டி
தொடரும் இந்த பயணம்
இயேசுவின் அடி சுவட்டில்
ஒரு பரதேசி போல்!
 
(c) 2015 Arun Jebaraj

என்று மாறும் உன் இதயம்?

சுற்றி நிற்கும் மரங்களும் கேட்கும்
காலடியில் தோய்ந்த புற்களும் தவிக்கும்
சாய்ந்து பேசிய ஈச்ச மரங்களுடன் சேர்ந்து
என்று மாறும் உன் இதயம்? 

தவித்து நிற்கும் உயிர்களின் அழுகை
புரியாத மெளன வலியினில் சேர்ந்து
தரணி எங்கும் கேட்கும்
என்று மாறும் உன் இதயம்?

உயர செல்லும் மேகங்களும் கேட்கும்
பறந்து செல்லும் பறவைகள் கூட
மெல்ல வீசும் தென்றலுடன் சேர்ந்து
என்று மாறும் உன் இதயம்?

 (c) 2015 அருண்ஜெபராஜ்

பாவமில்லா ஓர் உலகம் வேண்டும்!

பாவமில்லாத  ஓர் உலகம் வேண்டும்
அதில் புதிதாய் நான் பிறக்க வேண்டும்
கபடமில்லாத உள்ளம் வேண்டும்
அதில் களிப்புடன் நான் வாழ வேண்டும்
காமம் இல்லாத அன்பு வேண்டும்
அதில் வெட்கம் நாணம் கலந்திருக்க வேண்டும்
கற்புள்ள கன்னியாய் இருக்க வேண்டும்
அதில் கறைபடாமல் என்றும் வாழ வேண்டும்
காலை மாலை மாற வேண்டும்
அங்கு இளமையுடன் என்றும் நான் இருக்க வேண்டும்
முதுமையில்லாத ஒரு வாழ்க்கை வேண்டும்
அதில் முடிவில்லா நாட்களாய் வாழ வேண்டும்
சாவு இல்லாத வாழ்கை வேண்டும்
அதில் உன் மடியில் என்றும் வாழ்ந்திட வேண்டும்
நீதி நிறைந்த வானம் வேண்டும்
அதில் தென்றல் போல் இரக்கம் வீசவேண்டும்
யுத்தம் இல்லாத ஓர் குடும்பம் வேண்டும்
அதில் சிறு குழந்தையை போல் வாழ வேண்டும்
அன்பு நிறைந்த இதயம் வேண்டும்
அதில் சமாதானம் நதியாய் ஓட வேண்டும் 
கண்ணீர் இல்லாத கண்கள் வேண்டும்
அந்த கண்ணில் உன்னை என்றும் காண வேண்டும்
பிரிவில்லாத ஓர் உறவு வேண்டும்
அதில் பிரிவின் சோகம் அறியாதிருக்க வேண்டும்
முடிவில்லாத ஓர் வாழ்க்கை வேண்டும்
அதில் என் உணர்வுகளை சொல்ல வேண்டும்
இந்த வாழ்க்கை வேண்டும் அதை உன்னிடம் கேட்கிறேன்
இதை நீ எனக்கு என்றென்றும் தர வேண்டும் - இறைவா!

 ©2014  Arun Jebaraj

Monday, October 15, 2018

FORGIVE ME MUMMY FOR BEING BORN A GIRL IN INDIA...!

FORGIVE ME MUMMY FOR BEING BORN A GIRL IN INDIA...!

 

Forgive me, Mummy for being born a girl in India

You told me to bring back the horses

Today, the horses are back

But I’m not coming back home…

You called me the deer in the valley

But never told me that there are wolves in it

You taught me to love people

But never told me that there are beasts in it

Without knowing anything...

Our cattle are grazing, the streams are flowing,

The Yellow flowers are blooming, blue berries are fading,

Everything is going on as usual...

But not me....Mummy

I still remember,

Every day, when the night falls

How your heart longs for my return

Anxiously looking through the window

For my safe arrival!

Today, the horses are back

But not me…

Forgive me Mummy

For not coming back home

When the beast holds me as a prey

I cried for help

Even though I cried, this world remained silent

This World can silence my voice,

But cannot silence my Justice....Mummy!        

                                                   ©2018 Arun Jebaraj

(Dedicated to my little sister Asifa, Who got raped & killed, yet speaking through her death!)

 

 


Tuesday, October 9, 2018

Are you hearing the silent cry of the broken hearts?

Do you hear the silent cry of the broken hearts?
It needs a healing and a tender love to care
But you are cold enough to think about yourself
Don't you know how much it cost for Jesus?
To save your soul from eternal fire!
But you are worrying about silly things in your life
Come on, rise up and seek the lost souls
With tears sow the seeds of His eternal Word

His Spirit will work according to His Will
Beyond the measureless ways you could imagine

Jesus is same with the burden for perishing souls
Will you carry His burden? 

He will carry you till the end!
It is Father who works in the hearts of man
And never forget to say, "We're an unprofitable servant in this great work"


 2018 © Arun Jebaraj

Jesus will restore everything at the end!

When troubles raged in your life!
Jesus is always close beside to help
Lean on Him and tell
How much life hurts?
His peace will encompass beyond our understanding
He promises us that he won't leave us as orphans
Don’t lean on your own understanding
Instead, trust Him like a little Child
His every delay has a meaning
Those who wait for Him will never disappoint
There is no problem in this World
Which Jesus cannot fix
His tender love and mercies are same
As in the days of old
He will restore everything at the end!

                      (c) 2018 Arun Jebaraj