Friday, May 9, 2025

நிரந்தரமாய் உன் மூச்சில் வாழ்கிறேன்!

 

சில வலிகள் மௌன அழுகையில்

சில வலிகள் தமிழுக்கே உரிய அழகிய வரிகளில்

உளி இல்லாமல் செதுக்கும் சிற்பி அவன்

உதிரம் சிந்தாமல் வெட்டும் வைத்தியன் இவன்

நித்தம் நடக்கும் பல போராட்டதில்

நிரந்தரமாய் தன் அழகை என் இதயத்தில் வரையும் ஓவியன்

வலியின் ஊடாய் மாற்றம் கொள்ளும் வண்ணத்துப் பூச்சி போல்

நித்தம் ஒரு மாற்றும் கொண்டு சிறகடிக்கும் என் உள்ளான மனிதன்

குருசில் நித்தம் மரணம் தழுவியே தினம் உயிர்த்தெழுகிறேன் 

இனி நான் இந்த உலகில் இல்லை நிரந்தரமாய் உன் மூச்சில் வாழ்கிறேன்!

                       © 2025 Arun Jebaraj

No comments:

Post a Comment