Friday, July 6, 2018

மனிதன் மனம் கல்லு!

அனைத்தும் படைத்து,
மனிதனை உண்டாக்கி வாழ வைத்தான்!
ஓர் குடும்பமாய் இருக்க ஆசைப்பட்டு
அன்பு என்ற வார்த்தையால்
கட்டி ஆள நினைத்தான்!
ஆனால் மனிதன் இங்கு வாழவில்லை
பணம் என்ற ஒன்றை படைத்து
தன் மனதை கெடுத்து கொண்டான்!
அந்தஸ்து என்ற வார்த்தையில் தன்னை ஒளித்து கொண்டான்
உண்மை மறந்து உலகுக்கு அடிமையானான்
ஏனோ தெரியவில்லை?
இங்கு படைத்தவன் மனம் பித்து, மனிதன் மனம் கல்லு!

 (c) 2014  அருண் ஜெபராஜ்

No comments:

Post a Comment