Saturday, March 17, 2018

சிறு பிள்ளை போல்


தாயின் ஈர கால் தடம் பின்பற்றி  வரும்
சிறு பிள்ளை போல்
உம் அடி சுவட்டில் நடந்து வருகின்றேன்
பொல்லா உலகில் எத்தனை பாதைகள் 
மெய் பாதை உம் சிலுவை பாதை
பேதை நான் திசைக்கெட்டு போகாமல்
ஜீவ கரை சேர்த்திடும்!
பாதையின் இரு புறமும் நாசங்கள்
வழி  விலகாமல் காத்திடும்
எத்தனையோ சாத்தானின் சதி மோசங்கள்
வஞ்சிக்கப்படாமல் காத்திடும்
உபத்திரவத்தின் பாதையே ஜீவ பாதை
என்பதை  மனம் ஏற்க உதவிடும்!
காணும் யாவும் இங்கு மாயையே
என்பதை பேதை மனதிற்கு உணர்த்திடும்!
காணாத நித்தியம் தேட
அழியாத உம் சித்தம் என்றும் செய்ய
உம்  அன்பால் நிரப்பி வழி நடத்திடும்!
                                                   © 2018 அருண் ஜெபராஜ்

No comments:

Post a Comment