ஆகாயம் அது தொடுதூரம்
உன் நெஞ்சில் அன்பு இருந்தால்
பூலோகின் புவி விசை எல்லாம்
உன் காலடியில் தோற்றே நிற்கும்
சிறகில்லாமல் மனம் வானில் பறக்கும்!
தாழிட்டு இதயத்தை அடைத்து வைத்தாலும்
வார்த்தை இல்லா மெளனத்தில் மெல்ல கொன்றாலும்
தானாக அழுதிடும் துயரம் கண்டு
மறக்க மறக்க முயன்று நினைத்து நினைத்தே உருகிடும்
எத்தனை ஆழமாய் அன்பை ஒளித்து வைத்தாலும்
தானாக கண்கள் காட்டிவிடும்
நெருப்பு ஆறு ஒன்றே குறுக்கே வந்தாலும்
தண்ணீர் என நீந்தி வந்து விடும்
மலை போன்ற தடை வந்தாலும்
விடை ஒன்றை காண மோதிவிடும்
இனி பார்க்க மாட்டேன் என்றுயெல்லாம் சபதம் செய்தாலும்
இனிய இந்த அன்பால் சபதம் எல்லாம் காற்றில் பறக்கும்
இந்த முழு உலகமும் தண்ணீரில் அழிந்தாலும்
அழகிய வானவில் வாழ்வில் தோன்றிவிடும்
உயிரைப் போல் உதிரத்தில் மறந்திருக்கும் உன்னத அன்பில்
எந்த துரோகமும் மறைந்தே போகும்
முடிவில் அன்பே என்றும் எதையும் ஜெயித்திடும்
எந்த தீமையும் இவ்வன்பில் தோற்றே போகும்!
(c) 2017
Arun Jebaraj
No comments:
Post a Comment