Monday, May 30, 2016

என் இதயத்தில் நீர் இருந்தால்



கடவுளே, கடவுளே ஒரு இதயம் வேண்டும்
அதில் பொங்கும் அன்பு வேண்டும்
அதை ஊர் எல்லாம் நான் சொல்ல வேண்டும்
என் இதயத்தில் நீர் இருந்தால்
எந்த தீமையும் நான் ஜெயிப்பேன்!

கடவுளே, கடவுளே ஒரு வரம் வேண்டும்
அது சாகமல் என்றும் நான் வாழ வேண்டும்
எந்தன் சுவாசத்தில் நீர் வாழ்ந்தால்
மரித்தும் நான் உயிர்தெழுவேன்!

கடவுளே, கடவுளே ஒரு உறவு வேண்டும்
அதில் பிரிவில்லாமல் நாம் வாழ வேண்டும்
என் உணர்வுகளை நீர் அறிவதால்
என்றும் மகிழ்வுடன் நாம் வாழ்வோம்!
                                                                 (c) 2015 Arun Jebaraj

No comments:

Post a Comment