பணம் என்ற பேய் பிடித்து ஆடும் மனிதர் மத்தியில்
தேவ வார்த்தையினாலே மனிதன் என்றுயென்றும் பிழைப்பான்
என்று கற்று கொடுத்தீரய்யா!
காமம் என்னும் பித்து பிடித்து மிருகமாய் மாறின மனிதர் மத்தியில்
மன்னிப்பை வழங்கி பரிசுத்தமாய் வாழ்வது தான் மெய் வாழ்வு
என்று கற்று கொடுத்தீரய்யா!
வீண் பெருமையில் வீழ்ந்த மனிதர் மத்தியில்
பிதாவின் பாதம் வீழ்ந்தோர் என்றுயென்றும் வாழ்வார்
என்று கற்று கொடுத்தீரய்யா!
இயேசுவே, இனி எனக்கு இங்கு என்ன உள்ளது?
இனி உம் செருப்பாகி என்றும் உம் காலடியில் வாழ்வேன்!
உம் பெயருக்கு களங்கம் என்றால், என் உயிர் துறந்து உம் பெயர் காப்பேன்!!
© 2024 Arun Jebaraj