Monday, January 15, 2018

தமிழன் என்னும் அடையாளம் அழித்து யூதன் என்னும் அவமானம் தழுவுங்கள்!

தமிழன் என்னும் அடையாளம் என்னுள்ளே அழியுங்கள்!
இனி நான் அல்ல, கிறிஸ்துவே என் உள்ளம் என்று அறியுங்கள்
குல கோத்திர பெருமை எல்லாம் குழி தோண்டிப் புதையுங்கள்
கிறிஸ்துவின் நிந்தை மட்டும் நெற்றியில் இட்டு நிமிர்ந்து செல்லுங்கள்
சிறிது என்றாலும் பெரிது என்றாலும் இனி எல்லாம் கிறிஸ்துவே என் வாழ்வில் என்று சொல்லுங்கள்
சிரித்தாலும் அழுதாலும் எல்லாமே அவர் பிரியம் என்றே வாழுங்கள்
முடிவில்லா உபத்திரவம் என்றாலும், அது அழியாத கிறிஸ்துவின் உருவம் என்னுள்ளே என்பதை அறியுங்கள்
மூச்சு போல ஒரு நட்பு என்றாலும் கிறிஸ்துவுக்கு விரோதமாய் செல்லும்போது
வெளிவிடும் காற்று போல் விட்டு விலகியே செல்லுங்கள்
ஒரு வீழ்ச்சி என்றாலும் அது நன்மை என்றே முன்னேறி செல்லுங்கள்
ஒரு இகழ்ச்சி என்றாலும் அவர் நாமத்திற்கு கிடைத்த பாக்கியம் என்று நினையுங்கள்
வெறும் செருப்பு என்றாலும் ஐயன் இயேசுவின் காலடி செருப்பாய் வாழுங்கள்
தீராத வெறுப்பு என்றாலும் அது சாத்தானோடு மட்டும் வெறுப்பாய் நில்லுங்கள்
இனி தமிழன் என்னும் அடையாளம் அழித்து, கிறிஸ்துவின் அவமானம் தழுவுங்கள்
இவ்வுலகின் வேஷம் கலையும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை ஊர் அறிய அறிவியுங்கள்!

- (c) 2018 Arun Jebaraj