Wednesday, March 15, 2017

சகோதர ஐக்கியம்!


சகோதர ஜக்கியத்தில் அன்பு செய்ய
சட்டங்கள் எதுவும் கிடையாது
உபதேசங்கள் பேசி உறவாட
காலங்கள் எதுவும் போதாது
சிறுபூச்சி போல் புல்மேட்டில்
சத்தியம் பேசிடும் நேரம்
யுகங்களும் நமக்கு போதாது
ஏதேன் தோட்டம் வேண்டாம்
இயேசுவின் பிரசன்னம் போதும்
எதையும் மனம் தேடாது!
எதிர்மறை விசையால் தான் பூமி நிலைநிற்கும்
நம் எதிர்மறை கருத்தில் தான் உறவும் வளரும்
உலகம் அழியும் வரை இந்த உறவும் தொடரும்
உலக தோற்ற முன் தேவன் நம்மை தெரிந்துகொண்டதால்!

 (c) 2017 Arun Jebaraj