Friday, June 3, 2016

வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று புரிந்திடு!

ஏழைக்கு வாழ்க்கைப்பட்டாலும் கோழைக்கு வாழக்கைப்பட்டால்
வாழ்க்கை உனக்கு ரசிக்காது!
பட்டங்கள் பல படித்தாலும் மூடனுக்கு வாழ்க்கைப்பட்டால்
வாழக்கை என்றும் ருசிக்காது!
வீரன் என்று யாரும் இங்கு பிறப்பதில்லை
ஞானியன்று யாரும் உலகில் வந்ததில்லை
வாழ்க்கையின் அர்த்தம் என்னவென்று புரிந்திடு!
நேசம் ஒன்று கண்டால்
அனல் கொள்ளும் இதயம்
வீரத்தின் அர்த்தம் என்னவென்று தெரிந்திடும்!
தோல்விகள் பல கண்டால்
ஞானம் ஒன்று பிறக்கும்
இதை உன் இதயம் தானாய் உணர்ந்திடும்!
வாழ்க்கை பாடம் எந்த பள்ளியிலும் கிடையாது
வெட்கம் நாணம் பெண்னுக்கு என்றும் கோழையாகாது!
அன்பு என்றால் ஆண் என்றும் அடிமை கிடையாது!

                                                                            2015 (c)  Arun Jebaraj